இந்தியா

ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ராணுவவீரர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ராணுவவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ராணுவவீரர் கைது.. கேரளாவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 3-ம் தேதி டெல்லியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் காதலருடன் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த பெண் கழிவறை செல்லும்போது அதே ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர் ஒருவர் அந்த பெண்ணை கழிவறைக்குள் இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த ரயில் நிலையத்தில் அந்த பெண் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த ரயில்வே காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதைவிட கொடுமையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ராணுவவீரர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி சேர்ந்தவ பிரதீஷ்குமார் என்பவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா திரும்பிக்கொண்டிருந்தார். அதே ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது ரயில் எர்ணாகுளத்துக்கும் ஆலப்புழாவுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுவை கொடுத்துள்ளார்.

ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ராணுவவீரர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

இதில் அந்த பெண் சுயநினைவை இழந்த நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நினைவு திரும்பிய பின்னர் தான் வன்கொடுமைக்கு உள்ளானதை அந்த பெண் உணர்ந்து தனது கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் ரயில் திருவனந்தபுரத்தை அடைந்ததும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் புகாரின் அடிப்படையில் பிரதீஷ்குமாரை போலிஸார் கைது செய்தனர். பிரதீஷ்குமார் தன் மீதான புகாரை மறுத்துள்ள நிலையில், இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோவின் அடிப்படையில் பிரதீஷ்குமார் குற்றவாளியாக இருக்கக்கூடும் என போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories