இந்தியா

’எவ்வளவு பவுடர் போட்டாலும் நீ கருப்புதான்’.. 28 வயது இளம் பெண்ணை கொன்ற கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடகாவில் மனைவி கருப்பாக இருப்பதால் அவரை கணவன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’எவ்வளவு பவுடர் போட்டாலும் நீ கருப்புதான்’..  28 வயது இளம் பெண்ணை கொன்ற கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல். இவருக்குக் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பர்சானா பேகம் என்ற பெண்ணுடன் இருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பர்சானா பேகம் கருப்பாக இருந்ததால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர்.

’எவ்வளவு பவுடர் போட்டாலும் நீ கருப்புதான்’..  28 வயது இளம் பெண்ணை கொன்ற கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி!

அதோடு, நீ எவ்வளவுதான் பவுடர் அடித்தாலும் ஹீரோயினியாக மாட்டாய் என நீ கருப்புதான் என கிண்டல் அடித்து அவரை எல்லோர் முன்பும் அவமானப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோரிடம் கூறி பர்சானா பேகம் வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பர்சானா பேகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். அவரது அருகே இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டிருந்துள்ளது. இதைப்பார்த்த பால் வியாபாரி பர்சானா பேகம் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

’எவ்வளவு பவுடர் போட்டாலும் நீ கருப்புதான்’..  28 வயது இளம் பெண்ணை கொன்ற கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி!

பிறகு அவர்கள் வந்து மகள் உடலையும், குழந்தைகளின் நிலையைப் பார்த்துக் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, மனைவி கருப்பாக இருந்ததால் அவரை கழுத்து நெரித்து காலை செய்து விட்டு உடலைத் தூக்கில் தொங்கவைத்து விட்டு கணவர் காஜா படேல் குடும்பத்துடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள காஜா படேல் மற்றும் அவரது குடும்பத்தினரை போலிஸார் தேடி வருகின்றனர். கருப்பாக இருந்ததால் மனைவியைக் கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories