கடந்த 2020-ம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு விஷயம்தான் கொரோனா. சீனாவில் தொடங்கிய இந்த நோய் தொற்றானது, உலகம் முழுக்க பரவியது. ஒவ்வொரு நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க லாக் டவுன், pandemic என பலவகையான விஷயங்கள் கண்டது.
இந்த கொரோனா தொற்று காரணமாக நாளொன்றுக்கு உலகம் முழுவது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் இந்த தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்பட்டது.
சில நாட்களுக்கு பின்னர் இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஒவ்வொரு டோஸாக செலுத்திக்கொண்டனர். உலகளவில் இது நடைபெற்றது.
இதையடுத்து கொரோனா அடுத்தடுத்த அலைகள் வரத்தொடங்கியது. இதன் உருமாற்றம் சில நேரங்களில் வீரியமாகவும் காணப்பட்டது. இதனால் ஓமைக்ரான் போன்ற தொற்றுகள் வரத்தொடங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக மக்கள் நிம்மதியாக மூச்சுக்கூட விடமுடியாத அளவிற்கு கொரோனா பாடாய் படுத்தியது. மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உலக மக்கள் அனைவரும் தள்ளப்பட்டோம்.
பிறகு படிப்படியாக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததாக பெருமூச்சு விட்டு வருகிறோம். ஆனால் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத இன்னொரு நோய்தொற்று பரவிக்கொண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது கொரோனா தொற்று தற்போது முற்றிலும் முடியவில்லை என்றாலும், ஆங்காங்கே இந்த தொற்றால் சில பாதிப்புகள் இறப்புகள் நிகழ்ந்துதான் வருகிறது.
இந்த நிலையில் கொரோனா அலைக்கு பிறகு அண்மைக்காலமாக மக்கள் சிலர் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப் பட்டு வருகின்றனர். அதாவது நம்மை சுற்றி, ஏன் நமக்கே கூட இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். இருப்பினும் இது பனிக்காலம் என்பதால் இதுபோன்று இருப்பதாக நாம் நினைத்திருப்போம்.
ஆனால் நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டிருக்கும். இது தொடர்பான விஷயத்தை பிரபல எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான சஞ்சீவ் சன்யால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மிகவும் கொடிய சளிப் பூச்சி இந்தியா முழுவதும் (மற்றும் உலகம் முழுவதும்) பரவியுள்ளது. எனக்கு தெரிந்து நான் உட்பட அனைவருக்கும் ஒரு மோசமான தொண்டை தொற்று இருக்கிறது. " என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு கீழ் பல பிசினஸ் மேன்கள், வல்லுநர்கள் தாங்களும் இதே போல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். அதோடு சிலர் இதனை குளிர் கால காய்ச்சல், இது குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இந்தியா மட்டுமல்ல உலகளவில் பலருக்கும் காணப்படுகிறது.
இது புது வகை வைரஸ் தொற்றா என்பது குறித்த ஆய்வுகள் எதுவும் எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் இந்த நோய் வீரயமில்லாமல் இருப்பதால், சாதாரண வைரல் காய்ச்சல் போலவே காணப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்தியாவில் டெங்கு, அடினோ வைரஸ் போன்றவை பரவலாக காணப்படுகிறது. இதில் இந்த அடினோ வைரஸ் தொற்று குழந்தைகளை மட்டுமே அதிகம் தாக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த தொற்று மேற்கு வங்க பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. எனினும் நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.