சதி என்னும் உடன்கட்டை ஏறும் மூடபழக்க வழக்கத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி பெருமையாக பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துனர்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது மக்களவையில் பேசிய பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி , அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது தன் மானம் காக்க ராணி மத்மாவதி தானே தீக்குளித்ததாகக் குறிப்பிட்டு பேசினார்.
பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷியின் இந்த பேச்சால் அதிர்ந்து போன எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் சுப்ரியா சூலே, ராஜா, கே.முரளிதரன், இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்ட எம்.பி.க்கள் அவை முழக்கமிட்டு, பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் உள்ள கோரிக்கையை முன்வைத்தனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களைத் தொடர்ந்து அவை ஒத்தி வைத்து சபாநாயகர் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர் அவை மீண்டும் கூடிய போது, பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி தனது உரையை திரும்ப பெரும் படி கேட்டுகொண்டார். அதன்படி, அவையில் பேசிய பா.ஜ.க எம்.பி தனது உரையை திரும்ப பெருவதாக தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து பேசிய கனிமொழி எம்.பி., “ ஒவ்வொரு நாடும் அதன் கடந்த காலத்தைப் பற்றி பேசும் போது, அதற்கு வெவ்வேறு கடந்த காலங்கள், கடந்த காலத்தின் வெவ்வேறு விவரிப்புகள் உள்ளன. தீண்டத்தகாதவர்கள், பார்வையற்றோர் மற்றும் மானம் என்ற பெயரில் பெண்களை தீயில் தள்ளப்பட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதது. இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். பா.ஜ.க எம்.பி.யின் பேச்சால் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.