இந்தியா

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஒரு மளிகை கடைக்காரரின் பில் போல் உள்ளது என பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதன்படி இந்தாண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மேலும் ஐந்தாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சில பட்ஜெட் நல்லவையாக வெளியே காணப்பட்டாலும் பலவை குறைகளாகவே உள்ளது.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டுள்ளது. கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக அதிகரிப்பு. சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 % இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.மேலும், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கவசங்கள், பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

இந்த நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து மாநிலங்களைவை திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா கூறும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் இந்த பட்ஜெட் விவசாயத்தையும், பொதுத்துறையையும் நலிவடைய செய்யும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது எனவும், விவசாயிகள் பிரச்னையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விமர்சித்தார்.

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி

அதோடு ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி இதுகுறித்து குறிப்பிடும்போது, “இந்த பட்ஜெட் கடந்த 8-9 ஆண்டுகளாக வந்த அதே பட்ஜெட்தான். நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு பணம் செலவிடப்படவில்லை. வரிகள் மட்டுமே அதிகரித்துள்ளது. வரியால் பொதுமக்கள் பயனடைய வேண்டும். ஆனால் வரி அவர்களின் முதுகெலும்பை உடைக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் எம்.பி டிம்பிள் யாதவ் இதுகுறித்து, “விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, வேலைவாய்ப்பு, இளைஞர்கள் குறித்து அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. ரயில்வே துறை, பட்ஜெட்டில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

கௌரவ் கோகாய்
கௌரவ் கோகாய்

மேலும் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய் இதுகுறித்து, “விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எந்த தீர்வும் இல்லை. ஏழைகளுக்கு வெறும் வார்த்தைகளும், அர்த்தமற்ற பேச்சுகளுமே கிடைத்திருக்கின்றன. பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பட்ஜெட் பலன்கள் கிடைத்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

எதிர்க்கட்சிகள் ஒரு புறம் விமர்சித்து வந்தாலும், பாஜக முன்னாள் எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி இந்தாண்டு வெளியிட்ட பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இது இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டா? இது ஒரு மளிகை கடை கடைக்காரரின் பில் - ஒரு நேர்மையான பட்ஜெட் குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது GDP வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்தவும்." என்று விமர்சித்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , "ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வருமானவரி மாற்றங்கள் ஒருசாராருக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் இருக்கிறது. ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் அளிக்காத பட்ஜெட்" என விமர்சித்துள்ளார்.

எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வேலைகளை உருவாக்குவதற்கான ஒரு பார்வை இல்லை; சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை.

1% பணக்காரர்களுக்கு 40% சொத்து வைத்திருக்கிறார்கள், 50% ஏழைகள் 64% ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள், 42% இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்- ஆனாலும், பிரதமர் கவலைப்படவில்லை. இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது." என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories