ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள மகிளா காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுபாஶ்ரீ என்ற காவலருக்கு ஜனவரி 2-ம் தேதி இரவு பணி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பனி முடிந்து அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது சிலர் அவரை பின்தொடந்துள்ளனர்.
இதனை கண்ட அவர் தனது இருசக்கர வாகனத்தில் விரைவாக சென்றபோது அவர்கள் காரில் வேகமாக பின்தொடந்துள்ளனர். அவர்கள் கையில் வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பெண் காவலர் வேகமாக சென்றபோதிலும் அவரை அந்த கும்பல் மறித்துள்ளது.
பின்னர் பெண் காவலரை நோக்கி ஆபாசமாக பேசிய அந்த கும்பல் அவருக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டலும் விட்டுள்ளது. இந்த தருணத்தில் அங்கு சில காவலர்கள் வந்த நிலையில், அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பியுள்ளது.
அதன்பின்னர் பெண் காவலர் காவல்நிலையம் சென்று தனக்கு வந்த மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் மிரட்டல் விடுத்த அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
அந்த பெண் காவலரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் காவலர் என்று அறிந்துதான் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின்னர் அந்த காரை வைத்து அந்த கும்பலை சேர்ந்தா பேரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மூவரும் டாக்சி ஓட்டுனர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.