இந்தியா

முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி?

குஜராத்தில் மல்யுத்த போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்ற வீரர், 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் யோகா ஆசிரியாராக பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "நான் கடைக்கு சென்று விட்டு பார்க்கிங் செல்வதற்காக லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் என்னை தகாத முறையில் பார்த்தார்.

பின்னர் அவர் பேண்டை கழட்டினார். மேலும் என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார். இதனால் நான் கத்தி கூச்சலிடவும் அங்கிருந்து அவர் சென்று விட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து 4 தனிப்படை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி?

அப்போது அந்த பகுதியில் உள்ள சுமார் 1500 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர் மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்ததில் அவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகமூடி அணிந்துகொண்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி?

இதையடுத்து அவரை குஜராத் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா, குஜராத்தில் மாநில அளவில் கடந்த 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 74 கிலோ பிரீ ஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories