உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள பாத்புரா கிராமம் உள்ளது. இங்கு பாயல் என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் அஜய் தாகூர் என்பவரை காதலித்தும் வந்துள்ளார். இந்த நிலையில், இவரது பெற்றோர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாயல், தான் தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதம் ஒன்றை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அவரது உடலை அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இது ஒரு புறம் இருக்க, நொய்டாவின் கவுர் என்ற பகுதியில் இருக்கும் மால் ஒன்றில் பணிபுரியும் ஹேமா என்ற பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஹேமாவின் மொபைல் எண்களுக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் தற்கொலை செய்துகொள்வதாக கூறிய பாயலின் காதலன் அஜய் தாக்கூரின் எண்ணும் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனக்கும் அவருக்கு எந்த வித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களது பாணியில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நடந்த உண்மை எல்லாம் அவர் கூற, அதனை கேட்ட போலீசார் அதிர்ந்து போனர். அதாவது அஜயின் காதலி பாயலின் பெற்றோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இறந்ததால் கடன்காரர்கள் பாயலை தொந்தரவு செய்ததால், தான் இறந்து போனதாக நாடகமாடி தனது அடையாளங்களை மறைத்து வாழ எண்ணியுள்ளார்.
அதன்படி தன்னை போல் ஏதாவது உருவம் வேண்டும் என்று யோசித்திருந்தபோது, மாலில் வேலை செய்யும் ஹேமா அறிமுகமாகியுள்ளார். அவரிடம் அஜய் நைசாக பேசி நண்பராக ஆகியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று ஹேமாவை, பாயலின் வீட்டிற்கு வரவழைத்து அவரை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
மேலும் முகம் நன்றாக காட்டி கொடுத்துவிடும் என எண்ணியதால், அதனை அழிக்க ஹேமாவின் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளனர். அதோடு இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் ஒரு தொடரை பார்த்து அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த காதலி பாயலையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடன் தொல்லையில் இருந்து விலகி அடையாளங்களை மறைத்து வாழ எண்ணிய இளம்பெண் ஒருவர் தன் சாயலில் இருக்கும் வேறொரு பெண்ணை கொலை செய்துவிட்டு, தான்தான் தற்கொலை செய்த்துக்கொண்டதாக நாடகமாடியுள்ளது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.