மோர்பியில் இருக்கும் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிகழ்விடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற மோர்பி அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.
மோடியின் ஒருநாள் வருகைக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் மோடி வருகைக்கு செலவளிக்கப்பட்ட தொகை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கோரி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மோடியின் ஒருநாள் வருகைக்காக மட்டுமே சுமார் கைக்காக ரூ.30 கோடி செலவிடப்பட்ட தகவல் கூறப்படுகிறது. மேலும், மோடி வருகைக்காக ஒரே இரவில் ரூ. 11 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுதாகவும், மருத்துவமனையை சுத்தப்படுத்த, வண்ணம் பூசு, புதிய படுக்கைகள், குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ.8 கோடி செலவளிக்கப்பட்டது. பிரதமருக்கு வரவேற்பு அளிக்க ரூ.3 கோடியும், பாதுகாப்பிற்கு ரூ.2.50 கோடியும், நிகழ்ச்சி மேலாண்மைக்கு ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில், 2 இடங்களில் பிரதமரின் வருகையை புகைப்படம் எடுக்க மட்டும் ரூ.50 லட்சம் செலவளிக்கப்பட்டு இருப்பதாக மோர்பி நிர்வாகம் தெரிவித்தித்துள்ளதாக செய்திகள் வெளியானது. விபத்தில் உயிரிழந்த 135 பேருக்கு மொத்த இழப்பீடாக ரூ.5 கோடி மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் சிலமணி நேர வருகைக்காக ரூ.30 கோடி மக்கள் வரிபணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக விமர்சித்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என குஜராத் பா.ஜ.க.வினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட பொய் செய்தி என குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பல ட்விட்டர் பயனர்கள் இத்தகைய செய்தியை பகிர்த்திருப்பதால் உண்மையான செலவு எவ்வளவு என்பதை குஜராத் நிர்வாகம் வெளிப்படையாக வெளியிடவேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.