மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல கால் சென்டரில் வேலை பார்த்தவர் ஷர்தா என்ற இளம்பெண். இவர் ஒரு ஃபுட் Bloggerம் கூட. இவருக்கு இவர் வேலை பார்த்து வந்த அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இது காதலாக மாறியுள்ளது.
இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் இருவரும் மும்பையிலிருந்து டெல்லி வந்து வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், ஷ்ரதா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார்.
ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. இதனால் தந்தை விகாஸ்மதன் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்துள்ளார். பிறகு மகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து புனவல்லாவை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில், திருமணம் செய்ய வலியுறுத்தியதால் ஷ்ரதாவை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசியது தெரியவந்தது. மேலும் அமெரிக்க கிரைம் சீரிஸ்களை பார்த்தே இந்தக்கொலைகளையும் செய்ததும், துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி உள்ளிட்ட வாசனை திரவங்களைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. தற்போது அவரை போலிஸழர் 13 எலும்புத் துண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி விகாஸ்மதன் கூறும் ஒவ்வொரு வாக்கு மூலமும் போலிஸாருக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது. இந்த கொடூர கொலை நாடுமுழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இது போன்ற கொலைகளுக்குக் காரணம் படித்த பெண்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்து வருவதுதான் என ஒன்றிய அமைச்சர் கவுசல் கிஷோர் பேசியிருப்பது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் கவுசல் கிஷோர், "படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருப்பதுதான் இதுபோன்ற கொலைகளுக்குக் காரணம்.
அவர்கள் ஏன் லிவ் ஏன் உறவில் வாழ்கிறார்கள்?. லிவ் இன் உறவில் வாழ முறையான பதிவுகள் இருக்க வேண்டும். காதலைப் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று திருமணம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழலாமே. இதைவிட்டு ஏன் லிவ் இன் உறவில் வாழவேண்டும்?. படித்த பெண்கள் இதுபோன்ற உறவில் இருக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஒன்றிய அமைச்சர் கவுசல் கிஷோர் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, "எல்லாவற்றுக்கும் பெண்கள் தான் காரணமா? வெட்கமற்ற, இதயமற்ற மற்றும் கொடூரமான நபர்கள்தான் பெண்களைக் குற்றஞ்சாட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்