இந்தியா

ஜார்க்கண்ட் : பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி என்று நினைத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ஜார்க்கண்டில் பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி இருப்பதாக எண்ணி அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் : பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி என்று நினைத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்டில் பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி இருப்பதாக எண்ணி அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அக்டோபர் 10ஆம் தேதி பெண் ஒருவருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அந்த குழந்தையின் வயிற்றுப்பகுதியில் சிறிது வீக்கத்தை கண்ட மருத்துவர்கள் அது கட்டி போன்று உள்ளது என்று கூறி அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஜார்க்கண்ட் : பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி என்று நினைத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

மேலும் இதற்காக அந்த தனியார் மருத்துவமனை, ராஞ்சி அரசு மருத்துவமனையை பரிந்துரை செய்தது. அதன்பேரில் அங்கு குழந்தையை கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அது கட்டி போல் இருப்பது உறுதியானது. எனவே குழந்தைக்கு சிறிது நாள் (21 நாட்கள்) கழித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி கடந்த 1-ம் தேதி (நவம்பர் 1) குழுந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த கட்டியை வெளியே எடுத்தபோது அது நீர்க்கட்டி போல் இருந்துள்ளது. பின்னர் அதனை பரிசோதித்தபோது, அந்த கட்டுக்குள் 8 கருக்கள் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவை ஒவ்வொன்றும் 3-ல் இருந்து 5 செமீ வரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் : பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி என்று நினைத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த கட்டிகளை பத்திரமாக ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்துள்ளனர். இது குறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர் கூறுகையில், "21 நாட்களே ஆன இந்த பெண் குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கு கொண்டு வரப்பட்டது. நாங்கள் அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளோம்.

ஜார்க்கண்ட் : பிறந்த குழந்தையின் வயிற்றில் கட்டி என்று நினைத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. மேலும் குழந்தை சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த கட்டிகள் கருக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் 8 கருக்கள். இது மிகவும் அரிதான விஷயமாகும்.

பொதுவாக இப்படி அனைத்து குழந்தைகளுக்கும் இருக்காது. 5-ல் இருந்து 10 லட்சம் வரையிலான 1 குழந்தைக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழலாம். அப்படியும் காணப்பட்டால் 1 அல்லது 2 காணப்படும். ஆனால் இங்கு 8 கருக்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வை தான் fetus-in-fetu (FIF), அதாவது கருவுக்குள் கரு உருவாதல் என்று சொல்லப்படுகிறது" என்றார்.

banner

Related Stories

Related Stories