தமிழ்நாடு எல்லையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்டு பாறசாலை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு அவரை காதலித்து வந்த பெண்தான் காரணம் என கூறி ஷாரோன் ராஜின் பெற்றோர்கள் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலிஸார் காதலி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
கிரீஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், 'பெண்ணின் முதல் கணவன் உயிரிழந்து விடுவார். இரண்டாவது கணவருடன் மட்டும் தான் அவரால் வாழ முடியும்' என கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவும் அவரது குடும்பத்தினரும் நம்பியுள்ளனர்.
மேலும் கிரிஷ்மா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜோதிடர் கூறியதை அடுத்த தனது காதலன் உயிரைக் காப்பாற்ற குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். இதன்படி ஷாரோன் ராஜினை காதலித்துள்ளார். அவரும் இது எல்லாம் ஒரு நாடகம் என்று தெரியாமல் அவரை உண்மையாகக் காதலித்துள்ளார்.
இதையடுத்து ஷாரோன் விட்டை விட்டு வெளியேறி கிரீஷ்மாவை திருமணம் செய்துள்ளார். பிறகு அவர் தனது வீட்டிற்கு கிரீஷ்மா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலில் கஷாயம் கொடுத்துள்ளார். பின்னர் அவருக்கு தெரியாமல் விஷம் கலந்த ஜூஸ் குடிக்கக் கொடுத்துள்ளார்.
இதைக் குடித்த பிறகு ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் போலிஸார் கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான கிரீஷ்மா காவல்நிலையத்தில் கழிவறையிலிருந்த கிருமி நாசி குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு போலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், கஷாயம் குடித்த பிறகு காதலன் கிரீஷிமாவுக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். அதாவது கஷாயம் குடித்தபிறகு அந்த மாணவனுக்கு வாந்தி வந்துள்ளது. அதுவும் பச்சை கலரில் வந்துள்ளது. இதனை தனது காதலியிடமும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்த பெண்ணோ, கஷாயம் குடித்ததால் தான் அந்த கலரில் வந்திருக்கும், ஒன்றும் இல்லை சரியாக ஆகிடும் என்று சமாதானம் கூறியுள்ளார். மேலும் அப்படியே தூங்கி ரெஸ்ட் எடு என்றும் பாசமாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவனோ, அந்த கஷாயத்தை பெயர் என்ன என்று கேட்டதற்கு, தனக்கு தெரியாது என்று கூறி மழுப்பியுள்ளார்.
மேலும் அந்த பெண், அக்கறை கொள்வதை நம்பிய மாணவன், அந்த பெண் பயப்பட கூடாது என்று, தனக்கு ஒன்றுமில்லை, சரியாகிடும் என்று பெண்ணை சமாதானப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வாட்சப் குறுஞ்செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.