இந்தியா

அசாமில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. கட்டுகட்காக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: சிக்கிய அரசின் இணை செயலாளர்!

அசாம் மாநில அரசின் இணைச் செயலாளர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. கட்டுகட்காக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: சிக்கிய அரசின் இணை செயலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநில அரசின் இணையச் செயலாளராக இருப்பவர் கிசான் குமார் சர்மா. இவர் செக்யூரிட்டி நிறுவன உரிமம் ஒன்றைப் புதுப்பிப்பதற்காக லட்சம் கேட்டுள்ளார். இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரூ. 90 ஆயிரம் லட்சம் பணத்தை கிசான் குமார் சர்மா லங்சமாக வாக்கும்போது அவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வீட்டிலும் அதிரடியாகச் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 21ம் தேதி திப்ருகார் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மற்றும் செல்லாத ரூ.87 ஆயிரத்தையும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அசாமில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. கட்டுகட்காக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: சிக்கிய அரசின் இணை செயலாளர்!

அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 10 முதல் அக்டோர் 19ம் தேதி வரை மட்டும் 64 உயர் அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் உயர் அதிகாரிகளே லஞ்சம் வாங்குவது அம்மாநிலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை காட்டுவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories