உலகளவில் பல கோடி மக்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வாட்சப் என்பது பொதுமக்களிடையே பிரதானமாக விளங்குகிறது. இந்திய மக்களுக்கு தகவல் பரிமாற்றத்தில் முக்கிய புள்ளியாக விளங்கும் இந்த வாட்சப், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 2 மணி நேரமாக திடீரென்று செய்லபடவில்லை.
அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு (25.10.2022) முன்பு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் தங்களது தகவல்களை பரிமாற்றம் செய்வதில் பெரும் சிக்கலானது. அதாவது சூரிய கிரகணத்தன்று சுமார் 2 மணி நேரம் வாட்சப் இயங்கவில்லை. வாட்சப் இயங்காததற்கு வாட்சப் நிறுவனத்திடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் வாட்சப் செயலி ஏன் முடக்கப்பட்டது என வாட்சப் நிறுவனத்திடம் ஒன்றிய அரசு கேள்வியெழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே வாட்ஸ் அப் முடங்கியதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்த வீடியோ புகைப்படங்களை ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்ந்தனர். திடீரென்று வந்த இவ்வளவு பெரிய தரவுகளைக் கையாள முடியாமல் வாட்ஸ் அப் சர்வர்கள் முடங்கியதால் வாட்சப் சேவை ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது.
இதற்கு முன்னரும் வாட்சப் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முடங்கியுள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் அது சரிசெய்யப்படும். ஆனால் தற்போதுதான் 2 மணி நேரம் வாட்சப் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வாட்சப் முடிங்கியதால் பலர் புதிதாக டெலிகிராம் செயலியை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.