இந்தியா

வங்கிக்கணக்கில் இருந்து 2.2 லட்சம் திருட்டு.. செல்போனை பழுது நீக்கக்கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

செல்போனை பழுது நீக்கக்கொடுத்தவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2.2 லட்சம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக்கணக்கில் இருந்து 2.2 லட்சம் திருட்டு.. செல்போனை பழுது நீக்கக்கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (வயது 40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார்.

அந்த கடாயில் இருந்தவர் மறுநாள் செல்போனை பழுது நீக்கி கொடுப்பதாகவும், செல்போனை சிம் கார்டுடன் கொடுத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார். அதன்படி கதமும் தனது செல்போனை சிம் கார்டுடன் கடையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

வங்கிக்கணக்கில் இருந்து 2.2 லட்சம் திருட்டு.. செல்போனை பழுது நீக்கக்கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கடைக்காரர் கூறியபடி மறுநாள் செல்போனை வாங்க அதே கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த கடை மூடப்பட்டிருந்துள்ளது. மேலும், சில நாட்களாக அந்த கடை தொடர்ந்து மூடப்பட்டிருந்துள்ளர். இந்த நிலையில் அவர் தனது வங்கி கணக்கை எதேச்சையாக சோதனை செய்தபோது தனது செல்போன் எண்ணை வைத்து பணம் மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவுசெய்த போலிஸார் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கதமின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2.2 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories