இந்தியாவில் வடமாநிலங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 26 வயது பெண் அங்குள்ள பெண் நண்பர்களுடம் பைக்கில் வெளியே சென்றுள்ளார். இதனிடையே நேற்றைய தினம் அப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக போலிஸார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலிஸாரிடம் பெண் அளித்த வாக்குமூலத்தில், சாலையில் தனது நண்பர்களுடம் பேசிக்கொண்டிருக்கையில், அவ்வழியாவ வந்த 10 பேர் கொண்ட கும்பல், நண்பர்களை தாக்கிவிட்டு, அந்த பெண்னை கடத்திச் சென்றுள்ளனர். பைக்கில் கடத்திச் சென்ற அந்தக்கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், அந்த கும்பலை பிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.