இந்தியா

MakeMyTrip, Oyo நிறுவனங்களுக்கு ரூ.392 கோடி அபராதம்.. ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

வணிக விதிகளை மீறி செய்லபடுவதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து, தற்போது MakeMyTrip, Oyo உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.392 கோடி அபராதமாக விதித்துள்ளது.

MakeMyTrip, Oyo நிறுவனங்களுக்கு ரூ.392 கோடி அபராதம்..  ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு  காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது வணிகம் தொடர்பான சில பிரபலமான நிறுவனங்களில் MakeMyTrip, Oyo, Goibibo போன்ற நிறுவனங்களும் ஒன்று. இதில் MakeMyTrip நிறுவனம் என்பது பயணிகள் தங்களுக்கு ஏதுவாக இருக்க போக்குவரத்து, சுற்றுலா செல்பவர்கள் ஹோட்டல் புக் செய்வது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.

Goibibo நிறுவனம், இதே போன்று போக்குவரத்து முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. மேலும் oyo என்பது வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறை வசதி செய்து தரும் நிறுவனம் ஆகும். இவையனைத்தும் தங்களது சேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்கின்றனர்.

MakeMyTrip, Oyo நிறுவனங்களுக்கு ரூ.392 கோடி அபராதம்..  ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு  காரணம் என்ன?

அதோடு இது போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவையை முன்பதிவாக செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கபடுகிறது. இதனால் மக்கள் பலரும் தங்களுக்கு ஏதுவாக இருக்க இது போன்ற ஆப்களை உபயோகிக்கின்றனர். இதனால் மற்ற டூரிஸ்ட் நிறுவனங்களின் வளர்ச்சி குறைவதாக பல்வேறு நிறுவனங்கள் குற்றம் சாட்டிவருகிறது.

MakeMyTrip, Oyo நிறுவனங்களுக்கு ரூ.392 கோடி அபராதம்..  ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு  காரணம் என்ன?

இந்த நிலையில் இது போன்ற நிறுவனங்கள் வணிக விதிகளை மீறுவதாக அண்மையில் சில குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டு குறித்து 2019-ம் ஆண்டு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், தங்களது தொழிலை முன்னிலைப்படுத்துவதற்கும் இந்த நிறுவனங்கள், மற்ற ஹோட்டல் நிர்வாகங்களிடம் தங்களது நிறுவனத்தின் மூலமாக மட்டுமே சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து விதிகளை மீறி ஞாயமற்ற முறையில் செயல்பட்டதாக கூறி MakeMyTrip, Oyo, Goibibo உள்ளிட்ட நிறுவங்களுக்கு ரூ.392 கோடி ரூபாய் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அபராதமாக விதித்துள்ளது. அதில் OYO நிறுவனத்துக்கு 168.88 கோடி ரூபாயும், மேக் மை ட்ரிப் மற்றும் கோஐபிபோ-க்கு 223.48 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MakeMyTrip, Oyo நிறுவனங்களுக்கு ரூ.392 கோடி அபராதம்..  ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு  காரணம் என்ன?

அதோடு இந்த நிறுவனங்கள் செய்த முறையற்ற ஓப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையும் மற்ற நிறுவனங்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI - Competition Commission of India) பல்வேறு விசாரணைகளை நடத்தி வந்த நிலையில் மேக் மை ட்ரிப், ஓயோ, கோஐபிபோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது 392 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

banner

Related Stories

Related Stories