இந்தியா

பென்ஸ் CEO-வாகவே இருந்தாலும் எங்க ஊரில் இப்படிதான் போகணும் -இணையத்தில் வைரலாக ட்வீட் !

பென்ஸ் காரின் CEO புனே நகர டிராஃபிக்கில் சிக்கி நடந்தே சென்று ஆட்டோவில் ஏறி செல்லவேண்டிய இடத்துக்கு சென்றுள்ளார்.

பென்ஸ் CEO-வாகவே இருந்தாலும் எங்க ஊரில் இப்படிதான் போகணும் -இணையத்தில் வைரலாக ட்வீட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகின் ஆடம்பர கார் நிறுவங்களின் ஒன்று பென்ஸ். இந்த காரை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள் என அளவில் உலகம் முழுவதும் ஏராளமானோர் இந்த காருக்கு ரசிகராக இருக்கின்றனர். மேலும், பலர் வாங்க விரும்பும் கனவு காராகவும் பென்ஸ் இருக்கிறது.

பென்ஸ் நிறுவனத்தின் இந்திய CEO-வாக இருப்பவர்தான் மார்ட்டின். இவரது பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மஹாராஷ்டிராவில் உள்ள முக்கிய நகரான புனேவில் டிராஃபிக்கில் சிக்கியுள்ளார். டிராஃபிக் சரியாகாது என்று தோன்றியதால் அதில் இருந்து இறங்கி கொஞ்சம் கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று ஆட்டோவை பிடித்து செல்லவேண்டிய இடத்துக்கு சென்றுள்ளார்.

பென்ஸ் CEO-வாகவே இருந்தாலும் எங்க ஊரில் இப்படிதான் போகணும் -இணையத்தில் வைரலாக ட்வீட் !

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "புனேவின் அழகான சாலைகளில் உங்களின் S-class பென்ஸ் கார் டிராஃபிக்கில் சிக்கினால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை காரை விட்டு இறங்கி, கொஞ்சம் கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று ஆட்டோவை பிடிப்பீர்களா?" என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பலரும் இதை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் பென்ஸ் காருக்கே CEO-வாக இருக்கலாம்,, ஆனால் எங்க ஊரில் இப்படிதான் போகணும் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், புனேவின் போக்குவரத்துக்கு நெரிசலை விமர்சிக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories