இந்தியா

“இது காந்திய மண்.. வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இது காந்திய மண்.. வெறுப்புணர்வைத் தூண்டும்  சக்திகளுக்கு இடமில்லை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அண்ணல் மகாத்மா காந்தியின் 154 பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மாவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், தமிழகத்திலும் சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பலர் மரியாதை செலுத்தினர்.

இதனிடையே காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும்  சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories