இந்தியா

தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி.. விபத்தில் சிக்கி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!

தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் இருந்த பயணிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி.. விபத்தில் சிக்கி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரபிரதேசம் மாநிலம் தௌரேரா என்ற பகுதியில் இருந்து லக்னோ நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த தனியார் பேருந்து எரா பாலம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதியது. இரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயமடைந்தனர்.

தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி.. விபத்தில் சிக்கி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறை மற்றும் ஆம்புலனசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து மீட்பு படையினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் பயணித்த பயணிகளில் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் மற்ற 25-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயமடைந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி.. விபத்தில் சிக்கி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியும், உ.பி., முதலமைச்சர் யோகி ஆத்தியநாத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories