உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம்வீர். விவசாயியான இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இவரது மூத்த மகள் காணமால் போனதாக ஓம்வீருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு பகுதியிலும் தேடி மகள் கிடைக்காததால், ஓம்வீர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலிஸார் அவரின் புகாரை அலட்சியமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஒருவாரமாகியு மகள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கததால் ஓம்வீர் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்று மகளை விரைந்து கண்டு பிடித்து தருமாறு, அவரது பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மகளை கடத்தி இருப்பதாக ஊர் மக்கள் பேசுவதால் அவரை அழைத்து விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஓம்வீரின் கோரிக்கையை ஏற்காத காவல்நிலைய அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி அடைந்த ஓம்வீர் வெளியே வந்த போலிஸ் இன்ஸ்பெக்டரை மறித்துமகள் பற்றி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அவரின் கண்ணத்தில் அறைந்து வெளியே அனுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.