இந்தியா

ரூ.50 ஆயிரம் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. செல்லும் வழியில் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி?

புதுச்சேரியில் சிறுவனை கடத்தி பெற்றோரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

ரூ.50 ஆயிரம் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. செல்லும் வழியில் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் பர்கத் நகரைச் சேர்ந்தவர் முகமது. இவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின். இந்த தம்பதிக்கு11 வயதில் மகன் உள்ளார். இவர் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். மேலும் சிறுவன் பள்ளி முடிந்த பிறகு அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்று படித்து வருகிறான்.

இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவரை வழிமறித்து மிரட்டி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் கூச்சலிட்டுள்ளான்.

ரூ.50 ஆயிரம் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. செல்லும் வழியில் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி?

இதனால் அந்த வழியாக வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து விசாரித்து உள்ளனர். அப்போது அவர், மாணவர் தனது உறவுக்கார சிறுவன் என்று கூறியுள்ளார். அதற்குச் சிறுவன் என்னை இவர் கடத்திச் செல்கிறார் என்று கூறியுள்ளனர். பின்னர் உடனே அப்பகுதி மக்கள் வாலிபரை மடக்கி பிடித்து சிறுவனை மீட்டனர்.

ஆனால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பிறகு இது குறித்து பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் சிறுவனிடம் தகவல்களைக் கேட்டுக் கொண்டு அவரது அவரது தாயாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

ரூ.50 ஆயிரம் பணத்திற்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. செல்லும் வழியில் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி?

இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது மாணவனைக் கடத்திய வாலிபர் குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அமீது அப்துல் காதர் என்பது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், சிறுவனைக் கடத்தி சிறுவன், அவனது பெற்றோரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி நினைத்ததாகவும், அதற்குப் பொதுமக்கள் பிடிக்க முயன்றதால் சிறுவனை விட்டு விட்டு ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் வாலிபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories