இந்தியா

டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!

கடன் நிலுவைக்காக தனியார் நிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றபோது, தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை அதே டிராக்டரை கொண்டு ஏற்றி கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் என்ற பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சில மாதங்களாக அவர் அதற்கான பணத்தை செலுத்ததால் அவரது வீட்டில் உள்ள டிராக்டரை அந்நிறுவன அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!

அப்போது அந்த விவசாயியின் மகள் அவர்களிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இருப்பினும் அவர்கள் வாகனத்தை எடுத்ததால், அந்த பெண் அவர்களை தடுத்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணை கண்டுகொள்ளாத ஊழியர்கள், வேண்டுமென்றே அவரை டிராக்டரை கொண்டு இடித்துள்ளனர்.

இதில் கீழே விழுந்த அவர் மீது, அதே டிராக்டரை ஏற்றியுள்ளனர். இதில் வண்டியின் சக்கரத்தில் அந்த பெண் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்துள்ள அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செயப்பட்டுள்ளனர்.

கடனை திருப்பி செலுத்ததால் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவர் மீது டிராக்டர் ஏற்றி கொன்றுள்ள நிதி நிறுவனத்தின் செயல் அந்த பகுதியில் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories