இந்தியா

61-வது முறையாக பொதுச்செயலாளரான 106 வயது முதியவர்.. உ.பி. இரயில்வே சங்க தேர்தலில் வென்று அசத்தல் !

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இரயில்வே சங்கத்தேர்தலில் 61-வது முறையாக 106 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

61-வது முறையாக பொதுச்செயலாளரான 106 வயது முதியவர்.. உ.பி. இரயில்வே சங்க தேர்தலில் வென்று அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா. இவர் 1945-க்கு முன்னர் இராணுவத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். பின்னர் அதிலிருந்து விலகிய இவர், அம்மாநிலத்தின் வடக்கு இரயில்வே பணியில் இணைந்தார்.

1946-ல் இணைந்த இவர், அங்கிருக்கும் வடக்கு இரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்த வருடமே 1974-ல் ஜெயப்ரகாஷ் நாரயணன் என்ற அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

61-வது முறையாக பொதுச்செயலாளரான 106 வயது முதியவர்.. உ.பி. இரயில்வே சங்க தேர்தலில் வென்று அசத்தல் !

பின்னர் 1981-ல் இரயில்வே பணியில் இருந்து கண்ணையா லால் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னும் தனது மஸ்தூர் யூனியன் பணிகளில் இருந்து அவர் விலகவில்லை. தான் ஓய்வு பெற்றாலும் கூட மஸ்தூர் யூனியன் பணிகளிலும் தீவிரமாக ஈடுபாட்டார்.

இந்த நிலையில் தற்போது 106 வயதாகும் கண்ணையா லால், அண்மையில் நடைபெற்ற வடகிழக்கு இரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தேர்தலில் (NERMU) பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 160 வயதுடைய இவர் தற்போது 61-வது முறை இரயில்வே சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

61-வது முறையாக பொதுச்செயலாளரான 106 வயது முதியவர்.. உ.பி. இரயில்வே சங்க தேர்தலில் வென்று அசத்தல் !

இவரது இந்த வெற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவரது சாதனை 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'கின்னஸ் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கண்ணையா லால் கூறுகையில், "ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணனுடன் பணியாற்றியதன் மூலம் தான் எனக்கு இந்த உத்வேகமும் தார்மீக பலமும் கிடைத்தது" என்றார்.

61-வது முறையாக பொதுச்செயலாளரான 106 வயது முதியவர்.. உ.பி. இரயில்வே சங்க தேர்தலில் வென்று அசத்தல் !

மேலும் "NERMU அலுவலகம் தான் எனது ஒரே குடியிருப்பு; NERMU உறுப்பினர்கள் எனது குடும்பம்" என்று பெருமையாக தெரிவித்தார். கண்ணையா அவரது பணியிலிருந்து 4 முறை நீக்கப்பட்டார். அதோடு ஒரு மாதத்திற்கு ஒருமுறை சிறைக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும் அவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories