தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படம் ஏன் இடம்பெறவில்லை என்று அம்மாவட்ட ஆட்சி தலைவரிடம் கடுமையாக சாடி மோடியின் புகைப்படத்தை அங்கு வைத்தார்.இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடி படத்தை ஒட்டி விலை ரூ. 1105 என்று தெலுங்கானாவை ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதை குறிப்பிடும் வகையில் இது போன்று செய்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இது குறித்த வீடியோ, மற்றும் புகைப்படங்களில் இணையத்தில் வைரலான நிலையில், நிர்மலா சீதாராமனின் செயலுக்கு இதுபோலதான் பதிலடி கொடுக்க வேண்டும் என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.