பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர் மற்றும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
இருப்பினும் அடிக்கடி மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருதி மின்சார ஸ்கூட்டர்கள் பாதுகாப்பாகத் தயாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில், மின்சார ஸ்கூட்டடர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் எரிந்து சேதடைந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில், ஒரு ஸ்கூட்டருக்கு பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. அப்போது திடீரென பேட்டரி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த தீ விபத்தில் கடையிலிருந்த 10க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்சார ஸ்கூட்டடர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் எரிந்து சேதடைந்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.