இந்தியா

கடத்தல் குழந்தையை வாங்கிய பா.ஜ.க பிரமுகர்..1.80 லட்சத்திற்கு பேரம் பேசிய கொடுமை.. உ.பியில் அதிர்ச்சி!

ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு வாங்கிய பாஜக பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்தல் குழந்தையை வாங்கிய பா.ஜ.க பிரமுகர்..1.80 லட்சத்திற்கு பேரம் பேசிய கொடுமை.. உ.பியில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் 7 மாத பச்சிளம் குழந்தையுடன் அதன் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த குழந்தயை கடத்திச்சென்றார். இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் இது குறித்த விசாரணையில் இறங்கிய போலிஸார் குழந்தையை கடத்திய கும்பல் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பூனம் மற்றும் விம்லேஷ் டாக்டர் தம்பதியிடம் கொடுத்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த மருத்துவ தம்பதியினர் கண்டுபிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

கடத்தல் குழந்தையை வாங்கிய பா.ஜ.க பிரமுகர்..1.80 லட்சத்திற்கு பேரம் பேசிய கொடுமை.. உ.பியில் அதிர்ச்சி!

இந்த விசாரணையில் பரோசாபாத் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி வினிதா என்பவர் ரூ.1.80 லட்சத்திற்கு குழந்தையை வாங்கியது தெரியவந்தது. பின்னர், வினிதா மற்றும் அவரது கணவர் கிருஷ்ண முராரி ஆகியோரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் குழந்தையை வாங்கியது தாங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருந்த நிலையில் ஆண் குழந்தைக்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கில், பாஜக நிர்வாகி வினிதா அவரது கணவர் கிருஷ்ண முராரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் குழந்தையை வாங்கிய பா.ஜ.க பிரமுகர்..1.80 லட்சத்திற்கு பேரம் பேசிய கொடுமை.. உ.பியில் அதிர்ச்சி!

பாஜக நிர்வாகி வனிதா - கிருஷ்ண முராரி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என கடத்தல் குழந்தையை வாங்கியுள்ளனர். இதையடுத்து, வினிதாவிடமிருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி வினிதா அவரது கணவர் கிருஷ்ண முராரி உள்பட 8 பேரை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் வெளியான நிலையில் பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories