இந்தியா

புல்புல் பறவையில் பறந்த சாவர்க்கர்.. கன்னட மொழிப் பாடத்தில் கம்பி கட்டும் கதை: கல்வியாளர்கள் அதிர்ச்சி!

சிறையில் இருந்தபோது சாவர்க்கர் புல் புல் என்ற பறவையில் அமர்ந்து தாய் மண்ணுக்கு வந்து சென்றதாக கன்னட மொழிப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்புல் பறவையில் பறந்த சாவர்க்கர்.. கன்னட மொழிப் பாடத்தில் கம்பி கட்டும் கதை:
கல்வியாளர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இப்படி ஆங்கிலேயர்களிடம் அடிபணிந்து சென்ற சாவர்க்கரைதான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது அவரின் வரலாற்றை மாற்றி விடுதலை போராட்டத்திற்காக அரும்பாடுபட்டவர் என சித்தரிக்க முயன்று வருகிறது.

அண்மையில் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக அரசால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிறப்பு மலரில் கூட சாவர்க்கர் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா இதற்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்.

புல்புல் பறவையில் பறந்த சாவர்க்கர்.. கன்னட மொழிப் பாடத்தில் கம்பி கட்டும் கதை:
கல்வியாளர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படவைத்துள்ளது.

அதில், "அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது சிறை அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என இடம் பெற்றுள்ளது.

புல்புல் பறவையில் பறந்த சாவர்க்கர்.. கன்னட மொழிப் பாடத்தில் கம்பி கட்டும் கதை:
கல்வியாளர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து, பாடப் புத்தகத்தில் இப்படி பொய்யான தகவல் இடம் பெற்றதற்குக் கல்வியாளர்கள் முதல் மாணவர் அமைப்புகள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் உடனே 8ம் வகுப்பு கன்னட மொழி பாடத்தில் இருந்து சாவர்க்கர் பகுதியை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories