உத்தர பிரதசே மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்தவர் கான்பூர். இவருக்குப் பிறந்த குழந்தைக்குக் காது கேட்காமல் இருந்துள்ளது. இதையடுத்து ரயிலின் ஹாரன் சத்தம் தொடர்ந்து கேட்டால் குழந்தைக்குச் சரியாகிவிடும் என நினைத்துள்ளார்.
இதையடுத்து அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தையுடன் ஒருவர் நிற்பனை கண்டு உடனே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிறகு அவரை தண்டவாளத்தில் இருந்து விலகிச் செல்லுமாறு ஓட்டுநர் கூறினார். ஆனால் அவர் 'தனது குழந்தைக்குக் காது கேட்கவில்லை. ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டால் சரியாகிவிடும். நீங்கள் ஹாரன் அடியுங்கள்' என கூறியுள்ளார்.
இதையடுத்து பயணிகள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த ரயில் 8 நிமிட தாமதத்திற்குப் பிறகு மீண்டும் சென்றது. மூட நம்பிக்கையால் தந்தை செய்த விபரீத செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.