இந்தியா

சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?

சரக்கு இரயில் இன்ஜின் ஒன்றில் 18 வயது இளைஞர் சிக்கி, 5 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்றதில் உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் துமாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் குமார் லோதி (வயது 18). இவர் நேற்று டெல்லி-ஹவுரா இரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஒன்றின் இன்ஜினில் சிக்கியுள்ளார். சிக்கிய இவரை, அந்த இரயில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றுள்ளது.

சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?

இதையடுத்து இளைஞர் சிக்கியதை அறிந்த இரயில் ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர் இறங்கி வந்து பார்க்கையில் இளைஞரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதைக்கண்டு அதிச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞர் தவறுதலாக இன்ஜினில் சிக்கினாரா ? அல்லது தற்கொலை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories