இந்தியா

"GST-யால் பென்சில் விலை உயர்ந்து விட்டது..திருட்டும் அதிகரித்துவிட்டது" -மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி !

என் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு நீங்கள்தான் காரணம் என சிறுமி மோடிக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"GST-யால் பென்சில் விலை உயர்ந்து விட்டது..திருட்டும் அதிகரித்துவிட்டது" -மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது தவிர குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில் ஷார்ப்பனர், ரப்பர் மீதான ஜி.எஸ்.டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

"GST-யால் பென்சில் விலை உயர்ந்து விட்டது..திருட்டும் அதிகரித்துவிட்டது" -மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி !

இது தவிர இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இல்லாத நிலையில், நடப்பாண்டு ஜி.எஸ்.டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

"GST-யால் பென்சில் விலை உயர்ந்து விட்டது..திருட்டும் அதிகரித்துவிட்டது" -மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி !

இந்த நிலையில், ஜி.எஸ்.டி காரணமாக பென்சில் ரப்பர் மற்றும் மேகி நூடுல்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்ததற்கு நீங்கள் தான் காரணம் என பிரதமர் மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் என்ற ஊரைச் சேர்ந்தவர் கிரித்தி டுபே. 1ம் வகுப்பு மாணவியான இவர் பிரதமர் மோடிக்கு ஹிந்தியில் எழுதியுள்ள கடிதத்தில், "வணக்கம் எனது பெயர் கிரித்தி டுபே, நான் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறேன் என் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மோடிஜி நீங்கள்தான் காரணம். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடுகிறார்கள்" என எழுதியுள்ளார்.

இந்த கடிதம் இணையத்தில் வைரலாக நிலையில், இது குறித்து பேசியுள்ள சிறுமியின் தந்தை, வகுப்பில் என் மகள் பென்சிலை தொலைத்ததால் என் மனைவி அவரை திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட எரிச்சலில் இவ்வாறு கடிதம் எழுந்துள்ளாள் என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories