குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக புபேந்திர படேல் உள்ளார். இவரின் அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் அர்ஜூன் சிங் சவுகான்.
இவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹால்தார்வாஸ் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர்தான், தனது மனைவிக்கு அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
அவரின் அந்த புகாரில், 2015ம் ஆண்டு என் மனைவிக்கும், அமைச்சருக்கும் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து எனது மனைவியை அர்ஜூன் சிங் சவுகான் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார்.
இதையடுத்து ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் எனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கொரோனா காலத்தில் கூட தனியறையில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.
எனவே அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி கொள்வது பொதுமக்கள் மத்தியில் முகம்சுளிக்க வைத்துவருகிறது.