இந்தியா

“MPக்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல”: மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா

“29 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல” என்று மக்களவையில் கழகக் கொறடா ஆ.ராசா கூறினார்.

“MPக்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல”: மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை நேற்று முன் தினம் கூடியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பிரச்சனை எழுந்தது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘விதிகளை மீறினால் நடவடிக்கைதான். நடவடிக்கை எடுக்க விரும்பாத என்னை அதைச் செய்ய வைத்துவிடுவீர்கள் என அஞ்சுகிறேன். தயவு செய்து ஒத்துழையுங் கள்” என்றார்.

இதை எம்.பி.க்கள் ஏற்க மறுக்கவே அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட் டது. மதியத்துக்குப் பிறகு அவைகூடிய போது, கழகக் கொறடா ஆ.ராசா பேசினார். அவர் பேசியதாவது : “எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல. சபையின் மையப் பகுதிக்கு வருவதோ, ஜனநாயக முறைப்படி போஸ்டர்களை ஏந்தி கோஷம் போடுவதோ, புதிய விஷயம் இல்லை. இருந்தும் சபா நாயகர் நடவடிக்கை எடுத்து விட்டார்.

நீங்கள் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களுக்கு முன், எண்ணிக்கை பலம் நிற்கவே முடியாது. எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யுங்கள்.” இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

banner

Related Stories

Related Stories