கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, Kotak Private Banking Hurun 2021க்கான இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மூன்றாவது முறையாக வெளியிட்டப்பட்டுள்ள இந்த பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடம் வந்து தமிழ் பெண் ஒருவர் சந்தித்துள்ளார். ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமை பொறுப்பில் இருக்கும் ரோஷினி மல்ஹோத்ரா 84,330 கோடி சொத்துமதிப்புடன் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2020-ம் இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் சராசரி சொத்து மதிப்பு 2,725 கோடியாக இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் அது சுமார் 4,170 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 20-ல் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெட்செட்கோ நிறுவனத்தின் 33 வயதான கனிகா டெக்ரிவால், இந்த பட்டியலில் உள்ள இளைய பெண்மணி ஆவார்.
இது குறித்த கூறியுள்ள கோடக் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓஷர்யா தாஸ்," ஒவ்வொரு பெண்ணின் பயணமும் தனித்துவமானது; இருப்பினும், அவர்களிடையே வெற்றிக்கான உந்துதல், அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை பொதுவானது . பெண்கள் தனக்கென ஒரு இடத்தை செதுக்குகிறார்கள். அத்தகைய 100 பெண் தலைவர்களின் தளராத மனப்பான்மையைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" எனக் கூறியுள்ளார்.