இந்தியா

"உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்" - மோடியை விமர்சித்த கெஜ்ரிவால்!

இலவசம் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்" - மோடியை விமர்சித்த கெஜ்ரிவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இதுகுறித்து மக்களும் இளைஞர்களும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். இலவச திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இலவசம் குறித்த மோடி அரசின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்" - மோடியை விமர்சித்த கெஜ்ரிவால்!

இது தொடர்பாக பேசியுள்ள அவர், ”என்னை விமர்சிப்பவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து தனியாக விமானம் வாங்கிக்கொள்கிறார்கள். விமானம் வாங்கும் பணத்தில், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை உறுதி செய்திருக்கிறேன். இவ்வளவு இலவசங்கள் வழங்கியும், டெல்லி பட்ஜெட்டில் எந்தவித பாதிப்புமில்லை. மாநில வருவாய் லாபத்தில்தான் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது.

பெரு நிறுவனங்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தாமல்விடுவதால், வங்கிகள் திவாலாகின்றன. அப்போது அந்த நிறுவனங்கள் அரசாங்கத்துக்குப் பணம் கொடுத்துவிட்டு, தங்கள்மீது நடவடிக்கை பாயாமல் பார்த்துக்கொள்கின்றன. இதற்குப் பெயர்தான் இலவசங்களைக் காட்டி ஏமாற்றுவது.

"உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்" - மோடியை விமர்சித்த கெஜ்ரிவால்!

உங்கள் நண்பர்களின் ஆயிரம் கோடி ரூபாய்க் கடன்களை ரத்து செய்வதும், வெளிநாட்டு அரசுகளின் ஒப்பந்தங்களை உங்கள் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்குவதும்தான் இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் செயல். என்னை விமர்சிப்பவர்கள், தங்கள் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளும் கொடுக்கிறார்கள். அதுவே மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தினால், இலவசம் என்கிறார்கள்'' என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories