இந்தியா

பிரபல கேரள பெண் YouTuber மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை.. வீடியோ போடுவதற்காக இப்படியும் செய்வார்களா?

கேரள youtuber அமலா அனு மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல கேரள பெண் YouTuber மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை.. வீடியோ போடுவதற்காக இப்படியும் செய்வார்களா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அமலா அனு. இவர் amala anu's vlogs என்ற youtube சேனல் வைத்துள்ளார். இதில் shopping. சுற்றுலா தளங்களுக்குச் சென்ற அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அமலா அனு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் அனுமதியில்லாமல் புனலூர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஹெலிகேம் மூலம் வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை வீடியோ எடுத்துள்ளார்.

பிரபல கேரள பெண் YouTuber மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை.. வீடியோ போடுவதற்காக இப்படியும் செய்வார்களா?

இந்த வீடியோவை தனது youtube சேனலில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த வனத்துறை அதிகாரிகள் விதிகளை மீறி வனப்பகுதிக்குச் சென்றதாகக் கூறி அமலா அனு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அமலா அனு தலைமறைவாகியுள்ளார். அவரை வனத்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர். மேலும் அமலா சிறுவனை வனத்திற்குள் அழைத்துச் சென்றதால் அவர் மீது குழந்தை உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

பிரபல கேரள பெண் YouTuber மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை.. வீடியோ போடுவதற்காக இப்படியும் செய்வார்களா?

இந்த வழக்கில் youtuber அமலா அனுக்கு 7 வருடம் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதிக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபல youtuber அமலா அனு மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல youtuber அமலா அனு மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories