சினிமா

பிரபல ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தின் தீம் மியூசிக் இசையமைப்பாளர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.

பிரபல  ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

70's 80's 90's கிட்ஸ்-களிடம் வெகுவாக கவர்ந்த ஒரு திரைப்படம் தான் 'ஜேம்ஸ் பாண்ட்'. அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட CID என்றால் அது 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரம் தான் நினைவு படுத்தும். இவ்வளவு ஏன், ஹாலிவுட் திரைப்படமான 'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படத்தின் தூண்டுதலால் தான், தமிழில் அந்த காலத்தில் பெரும்பாலான CID சம்மந்தப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டது.

பிரபல  ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!

பொதுவாக தமிழில் 'ஜேம்ஸ் பாண்ட்' போன்ற திரைப்படங்கள் எடுப்பதானால், அது நடிகர் ஜெய் சங்கரை வைத்து தான் எடுப்பர். இதன்மூலம் தான் அவருக்கு 'CID சங்கர்' என்ற அடைமொழியே வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவரது படத்திலும் 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தின் தீம் மியூசிக் தான் இடம்பெற்றிருக்கும்.

பிரபல  ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!

என்ன தான் துப்பறிவாளன், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மாதிரி திரைப்படங்கள் வந்தாலும், 'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படம் என்றும் நிலைத்து நிற்க காரணம் அதன் தீம் மியூசிக் தான். அந்த மியூசிக்கை இசையமைத்த இசையமைப்பாளர் மாண்டி நார்மன் என்பவர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.

பிரபல  ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!

கிழக்கு லண்டனை சேர்ந்த இவர், 1962 ஆம் ஆண்டில் வெளியான 'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு பிரபலமானார். பிறகு பல்வேறு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்த இவர்,94 வயதுடைய இவர், வயதுமுதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவிற்கு திரை உலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories