உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 1,98,65,36,288 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும் இன்னும் முழு முயற்சியோடு ஒன்றிய அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், போலியாக எண்ணிக்கையை ஒன்றிய பா.ஜ.க அரசு தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர் பவன். ஆந்திராவைச் சேர்ந்தவர் பவன்.
இவரது தந்தை கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். ஆனால், உயிரிழந்த அவரது தந்தை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பவன் இதுதொடர்பாக ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் என்னுடைய தந்தை 2021ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி காலமானார். அதிகாரப்பூர்வ பதிவுகள் உள்ளது. ஆனால் அவர் இறந்தபிறகும் அவருக்கு இரண்டாவது முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகளை அரசாங்கம் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது என விமர்ச்சித்துள்ளார்.