மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அம்மாநில அரசு நலத்திட்ட உதவியின் கீழ் சிறிய துண்டு நிலம் வழங்கியுள்ளது.
இந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குக் கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் அரசு கொடுத்த நிலத்தைக் கொடுக்க முடியாது என உறுதியாக அந்த பெண் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த பெண்ணின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து அந்த பெண் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த பெண்ணுக்கு அந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும், பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகிய மூன்று பேரும் அந்த பெண்ணின் நிலத்திலேயே அவர்மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பழங்குடி பெண்ணின் கணவர் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, தீயை அணைத்து தனது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்க அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பழங்குடி பெண்ணை எரிந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தில் இருந்த பழங்குடியினர், பெண்கள் மீது தொடர்தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.