பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் என்பவர் மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் குவிந்தன. இதனால் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் வீட்டில் இருந்து 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் அவரது படுக்கையில் இருந்து ரூ.3 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். பின்னர் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவரது படுக்கை அறை முழுக்க பணம் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் மேல் வழக்கு பதியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஜிதேந்திர குமார் பாட்னாவில் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.