இந்தியா

"இளைஞர்கள் உழைப்பது பா.ஜ.க அலுவலகத்தை காவல் காக்க அல்ல".. கொதித்தெழுந்த டெல்லி முதல்வர்!

நம் இளைஞர்கள் இரவு பகலாக கடுமையாக உழைப்பது ராணுவத்தில் சேருவதற்காகதானே தவிர பாஜக அலுவலகத்துக்கு காவலராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

"இளைஞர்கள்  உழைப்பது  பா.ஜ.க அலுவலகத்தை காவல் காக்க அல்ல".. கொதித்தெழுந்த டெல்லி முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

"இளைஞர்கள்  உழைப்பது  பா.ஜ.க அலுவலகத்தை காவல் காக்க அல்ல".. கொதித்தெழுந்த டெல்லி முதல்வர்!

அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.மேலும் தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த திட்டம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இளைஞர்கள்  உழைப்பது  பா.ஜ.க அலுவலகத்தை காவல் காக்க அல்ல".. கொதித்தெழுந்த டெல்லி முதல்வர்!

பா.ஜ.க தலைவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , ``நம் நாட்டு இளைஞர்கள் உடல் தேர்வில் தேர்ச்சி பெற இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என உழைக்கிறார்கள். பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியே காவலராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல '' எனக் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories