நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையில் ஆஜராக வேண்டும் என அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்றும், இன்றும் ராகுல்காந்தி ஆஜரானார்.
முன்னதாக நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலநூற்றுக் கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.
அப்போது, போலிஸார் அனுமதியை மீறி பேரணி நடத்தியதாக ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது போலியிருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்குக் கையில் விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரின் மூக்குக் கண்ணாடியை போலிஸார் கீழே போட்டு மிதித்து உடைத்ததாகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட வீடியோ தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலிஸாரின் இந்த அராஜக நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் மோடி அரசின் காட்டுத்தர்பார் ஆட்சி இது எனவும் விமர்சித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதாகத் தனது ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெயிட்ட ட்விட்டர் பதிவில், "நான் தற்போது நலமாக இருக்கிறேன். நாளை முதல் எனது வழக்கமான பணிகளை மேற்கொள்வேன். இந்த சிறிய காயத்திலிருந்து 10 நாட்களில் கணமடைந்துவிடுவேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என தெரிவித்திருந்தார்.
மேலும் விலா எலும்பு முறிவுக்குச் சிகிச்சை பெற்றுக் கொண்டே ஆங்கில ஊடங்களில் நடைபெற்ற விவாத நிகழ்வில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியுள்ளார். இதையடுத்து இன்று வழக்கம்போலு தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.