இந்தியா

கேரளாவில் பரவும் West Nile வைரஸ்.. ஒருவர் பலி: புதிய தொற்றுக்கு காரணம் என்ன?

கேரளாவில் புதிதாக வெஸ்ட் நைல் காச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பரவும் West Nile வைரஸ்.. ஒருவர் பலி: புதிய தொற்றுக்கு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் 'ஜிகா' வைரசை போன்று புதிது புதிதாக உயிரை கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பரவாமல் இருக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் பரவக் கூடியது.

இந்தியாவிலேயே முதன் முதலில் 2006ம் ஆண்டு கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தான் இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறகு 2011ம் ஆண்டு எர்ணாகுளத்திலும், 2019ம் ஆண்டு மலப்புரத்திலும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் முதன் முதலில் உகாண்டா நாட்டில்தான் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories