இந்தியா

மக்களே உஷார்.. வங்கி கணக்கில் ரூ.30,628 உதவித்தொகை: ஒன்றிய அரசின் பெயரில் போலி செய்தி - எச்சரிக்கும் PIB!

ஒன்றிய அரசின் நிதியமைச்சக்கத்தின் பெயரில் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படுவதாக போலி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்.. வங்கி கணக்கில் ரூ.30,628 உதவித்தொகை: ஒன்றிய அரசின் பெயரில் போலி செய்தி - எச்சரிக்கும் PIB!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசின் நிதியமைச்சக்கத்தின் பெயரில் போலி செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த போலி செய்தியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒன்றிய நிதியமைச்சகம் பெயரில் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாரிக்க, அரசு மேற்கொண்டு வரும் பரிசீலனைக் காரணமாக சில முடிவுகள் எடுத்துள்ளது. அதன்படி, இந்தியர் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் தலா 30,628 ரூபாய் உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது அந்த செய்தி நிறுவனம்.

இந்நிலையில், உதவித்தொகை வழங்கப்பட்டும் எனு பரவிய செய்தி போலியானது என ஒன்றிய அரசின் PIB (press information bureau) விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, PIB வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக வலைதளங்களில் வெளியான போலி செய்தி தொடர்பான ( https://bit.ly/3P7CiPY) லிங்க்-ஐ குறிப்பிட்டு, ஒன்றிய நிதியமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தலா ரூ.30,628 நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி போலியானது. ஒன்றிய நிதியமைச்சகம் அதுபோல எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் இதுபோன்ற நம்பகத்தன்மை அற்ற செய்திகளைப் பார்த்தால் அதை https://factcheck.pib.gov.in.என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது +918799711259 என்ற நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்யலாம். pibfactcheck@gmail.com.என்ற ஈமெயில் ஐடியும் உள்ளது.

banner

Related Stories

Related Stories