இந்தியா

பள்ளியில் மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியை கைது.. அசாமில் நடந்த பரபரப்பு!

மாட்டிறைச்சி பகிர்ந்ததற்காக அசாமில் தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியை கைது.. அசாமில் நடந்த பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலத்தின் கோல்பரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் டாலிமான் நெஸ்ஸா (56).

இவர் கடந்த திங்களன்று (மே 16) பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததாகவும், அதனை சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்களுக்கு மாட்டிறைச்சி கொடுத்ததாக டாலிமான் நெஸ்ஸா மீது பள்ளி மேலாண்மை குழுவினர் பிற ஆசிரியர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

அதன் பேரில் பள்ளி மேலாண்மைக்குழு போலிஸில் புகாரளித்ததன் அடிப்படையில் IPC 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்குமிடம் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295A (மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை கலைக்கும் நோக்கம்) ஆகிய சட்டங்களின் கீழ் நெஸ்ஸா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

பள்ளியில் மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியை கைது.. அசாமில் நடந்த பரபரப்பு!

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், 2021ல் இயற்றப்பட்ட பசு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சிறுபான்மையினர்களையும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதில், பசுவதை தடுப்புச் சட்டமும் ஒன்று.

இதனால் வட மாநிலங்களில் உள்ள சாமானிய மக்கள் பசுக் குண்டர்களால் பெரிதளவில் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories