இந்தியா

புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் குறிப்பு நீக்கம் : ஹெட்கேவார் பாடத்தை நுழைத்து கர்நாடகா அரசு அராஜகம்!

கர்நாடகாவில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து தந்தை பெரியார், நாராயண குரு ஆகியோர் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் குறிப்பு நீக்கம் : ஹெட்கேவார் பாடத்தை நுழைத்து கர்நாடகா அரசு அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே கல்வியில் இந்துத்துவா கொள்கையை எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களைப் பாடத்திட்டங்களில் நுழைத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

மேலும் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் மற்றும் சமூக நீதி குறித்து பேசியவர்களைப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. இப்படி பள்ளி பாடத்திட்டங்கள் தொடங்கி பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வரை தனது இந்துத்துவா சித்தாந்தங்களை புகுத்திட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதற்காக இந்துத்துவா கருத்துகள் கொண்டவர்களைக் கல்வி அதிகாரிகளாக நியமித்து தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.க அரசின் இந்த காவிமய கல்விக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து, கல்வியில் காவி புகுந்துவிடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் 10ம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலைப்போராட்ட வீரர் பகத்சிங் பாடமும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories