பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்குத் திருமணமாகி தனது கணவனுடன் சென்று விட்டனர்.இதையடுத்து 18 வயது மகள் ஒருவரும், மற்ற இரண்டு பெண் பிள்ளைகளும் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது மகளைக் கணவன் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இனி இதுபோன்று நடக்காது என மனைவியுடன் கூறியுள்ளார். பிறகு கணவனிடம் இருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து, அடுத்த மகளின் நடத்தையில் அவரின் தாயாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாயார் கேட்டபோது அவர் எதுவும் சொல்ல மறுத்துள்ளார். மேலும் தாயாரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் மூத்த மகளின் வீட்டிற்குச் சென்றபோது, தங்கையைப் பலமுறை தந்தை வன்கொடுமை செய்ததாகத் தாயிடம் அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மனைவியை, கண்டித்துவிட்டு அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரது கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.