இந்தியா

“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” - வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!

ஆந்திர மாநிலத்தில் கடலில் இருந்து விசித்திரமான தங்க தேர் ஒன்று கரை ஒதுங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அசானி புயலால் கரை ஒதுங்கிய தங்க தேர்..?” -  வியப்பில் ஆழ்ந்த மக்கள்: ஆராய்ச்சியில் இறங்கிய அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடலில் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தத் தேரைக் கரைக்கு இழுத்து வந்தனர்.

தேரின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக இந்தத் தேர் அடித்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.

அசானி புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாக 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையிலும் மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களாக கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories