இந்தியா

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கேரள அரசு பேருந்து; 10 பேருக்கு காயம்.. நாகர்கோவில் அருகே பரிதாபம்

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கேரள அரசு பேருந்து; 10 பேருக்கு காயம்.. நாகர்கோவில் அருகே பரிதாபம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த கேரள அரசு பேருந்து, நெய்யாற்றின்கரை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பத்து பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று (மே 10) மாலை கேரள அரசு பேருந்து அதிக அளவிலான பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கேரள அரசு பேருந்து; 10 பேருக்கு காயம்.. நாகர்கோவில் அருகே பரிதாபம்

பேருந்து நெய்யாற்றின்கரை அருகே வெடிவச்சான்கோவிலில் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கடைக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கேரள அரசு பேருந்து; 10 பேருக்கு காயம்.. நாகர்கோவில் அருகே பரிதாபம்

விபத்துக்குள்ளான பேருந்து நெய்யாற்றின்கரை பணிமனையில் உள்ளது. காயமடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு உயிர் சேதம் இல்லாதது, பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories