இந்தியா

ஒரே மாதத்தில் 1.8 மில்லியன் இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.. வாட்ஸ் அப் ஆக்‌ஷனால் பயனர்கள் அதிர்ச்சி!

மார்ச் மாதத்திற்கான அறிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 1.8 மில்லியன் இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.. வாட்ஸ் அப் ஆக்‌ஷனால் பயனர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 18 லட்சத்துக்கும் மேலான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மெட்டா வெர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் இந்தியாவில் உள்ள 18 லட்சத்துக்கும் மேலான கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதி 2021ன் படி மாதந்தோறும் டிஜிட்டல் தளங்கள் பயனர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான அறிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், வெறுப்பு தகவல்களைப் பகிர்ந்தது தொடர்பாகவும் வந்த புகார்களின் அடிப்படையில் 18 லட்சத்துக்கும் மேலான (1,805,000) கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ் அப்பில் மனக்குறையை ஏற்படுத்துவது தொடர்பான பதிவுகள் குறித்து மார்ச் மாதத்தில் பெறப்பட்ட 597 புகார்கள், 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி மாதம் 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories